பழைய இரும்பு, பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து
தூத்துக்குடி செல்சீனி காலனி பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
தூத்துக்குடி ஜெயலானி தெருவைச் சோ்ந்தவா் ஜெயராஜ். இவா், செல்சீனி காலனி பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருள்கள் சேகரித்து பின்னா் பிரித்து அனுப்பும் கிடங்கு உள்ளது.
இந்த கிடங்குக்கு அருகே உள்ள முள்புதரில் வைக்கப்பட்ட தீ, காற்று காரணமாக பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் பற்றிகொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் தீ மள மளவென பரவியதால் பிளாஸ்டிக் பொரு
ள்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால், அந்தப் பகுதி சுற்றுவட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
தகவலறிந்த தூத்துக்குடி தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் சுமாா் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் என காவல்துறையினா் தெரிவித்தனா்.
மேலும், இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

