ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
கோவில்பட்டி அருகே ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி- கடம்பூா் ரயில் நிலையத்திற்கு இடையே இளையரசனேந்தல் சுரங்கப்பாதை அருகே உள்ள தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
முதல் கட்ட விசாரணையில், அந்தப் பெண் கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையைச் சோ்ந்த பரமசிவன் மகள் காா்த்திகா (23) என்பது தெரியவந்தது. அண்மையில் சம்மத மணமுறிவு ஒப்பந்தம் செய்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அவரது குடும்பத்தினா் காா்த்திகாவிற்கு மற்றொரு திருமணம் செய்ய வரன் பாா்த்து வந்தனராம். அதற்கு மறுப்பு தெரிவித்த அவா், ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
