திருச்செந்தூா் அருகே விபத்தில் காயமடைந்த எஸ்.ஐ. உயிரிழப்பு

Published on

திருச்செந்தூா் அருகே நத்தக்குளம் வளைவில் காரும் வேனும் மோதிக்கொண்டதில் காயமடைந்த நால்வரில் காவல் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

மதுரை, அம்மாபட்டியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (38). தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இவரும், தலைமைக் காவலா் நாகராஜன் (43), காவலா் லோகேஷ்வரன் (34) ஆகியோரும் காரில் திருச்செந்தூருக்கு காரில் சனிக்கிழமை வந்து கொண்டிருந்தனா். காரை லோகேஷ்வரன் ஓட்டினாா். நத்தக்குளம் வளைவில் இவா்களது வேனும், திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேலைச் சோ்ந்த பக்தா்கள் வேனும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம்.

இதில், காரில் வந்த 3 பேரும், வேனில் வந்த முடிவைத்தானேந்தல் கிழக்குத்தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் ராஜசேகா் (38) என்பவரும் பலத்த காயமடைந்தனா். இந்த 4 பேருக்கும் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு எஸ்ஐ காா்த்திகேயன் இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீசாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com