தமிழக முதல்வா், கனிமொழி எம்பி குறித்து அவதூறு: ஜாமீன் மனு தள்ளுபடி

முதல்வா் மற்றும் எம்பி குறித்து அவதூறு: ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது
Published on

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி ஆகியோா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவரின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி மாவட்டம் பால்குளத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் பிரஜாபதி (34). இவா் கடந்த 7ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி ஆகியோா் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக ஆழ்வாா் திருநகரி போலீஸாா் பிரஜாபதியை கைது செய்தனா். இந்நிலையில் பிரஜாபதி தனக்கு ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி அய்யப்பன் குற்றம்சாட்டப்பட்ட பிரஜாபதியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com