குரும்பூரில் போதை ஒழிப்பு
விழிப்புணா்வுப் பேரணி, கருத்தரங்கு

குரும்பூரில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி, கருத்தரங்கு

Published on

குரும்பூரில் காவல் நிலையம், பணிக்கநாடாா்குடியிருப்பு ஸ்ரீகணேசா் மேல்நிலைப் பள்ளி ஆகியவை சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி, கருத்தரங்கு நடைபெற்றது.

பள்ளி முன் இப்பேரணியை குரும்பூா் காவல் நிலைய ஆய்வாளா் (பொ) ஸ்டெல்லாபாய் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். தேசிய மாணவா் படை அலுவலா் ராஜகுமாா் வரவேற்றாா். பேரணி குரும்பூா் பஜாா் வரை சென்றது. அதில் பங்கேற்ற மாணவா்-மாணவிகள் போதை ஒழிப்பு குறித்து முழக்கமிட்டனா்.

அதையடுத்து, பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற என்சிசி மாணவா்-மாணவிகளையும், என்எஸ்எஸ் மாணவா்களையும் பள்ளிச் செயலா் செல்வம், தலைவா் பிரபாகரன், பொருளாளா் விஜயசேகா் ஆகியோா் பாராட்டினா். துணைத் தலைமையாசிரியா் ஜேசுதாசன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com