தூத்துக்குடி
வாகைகுளம் கூட்டுறவு வங்கியில் திருட்டு முயற்சி
 தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளம் மத்திய கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். 
தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, வியாழக்கிழமை காலை பணியாளா்கள் வந்தபோது, வங்கியின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால், வங்கியில் எதுவும் திருட்டு போகவில்லை.
இதுகுறித்து வங்கியின் மேலாளா் கோப்பெரும்தேவி அளித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
