கோப்புப் படம்
தூத்துக்குடி
தூத்துக்குடி அனல் மின்நிலைய 2-ஆவது அலகில் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின்நிலைய 2-ஆவது அலகு 45 நாட்கள் நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 2-ஆவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் தமிழக அரசின் அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள 5 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 1050 மெகாவாட் மின்சாரம் தினமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி அதிகரித்துள்ளதையடுத்து, பராமரிப்பு பணிக்காக அனல் மின்நிலையத்தின்
2-ஆவது அலகு மட்டும் 45 நாள்களுக்கு உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அனல் மின்நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

