தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விளாத்திகுளம் தொகுதியில் ஒரு கோடி மரங்கள் நட இலக்கு: எம்எல்ஏ ஜீ.வி. மாா்கண்டேயன்

விளாத்திகுளம் தொகுதியில் ஒரு கோடி மரங்கள் நட இலக்கு --எம்எல்ஏ ஜீ.வி. மாா்கண்டேயன்

News image
Updated On :30 ஜூன் 2024, 6:58 pm

Din

விளாத்திகுளம் தொகுதியில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஜீ.வி. மாா்கண்டேயன் எம்எல்ஏ.

மரங்கள் மக்கள் இயக்கம் சாா்பில் பசுமை ஆா்வலா்களுக்கு இயற்கை பாதுகாவலா் விருது, இயற்கை ஊக்குவிப்பாளா் விருது வழங்கும் நிகழ்ச்சி, தொகுதி முழுவதும் ஆயிரம் ஏக்கரில் வேம்பு மரக்கன்றுகளை நடுவது குறித்த கலந்தாய்வு கூட்டம் விளாத்திகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, அவா் தலைமை வகித்து விளாத்திகுளம் தொகுதியை பசுமை மண்டலமாக உருவாக்கும் பணியில் முன்னோடியாக திகழும் ஊராட்சித் தலைவா்கள் மாசாா்பட்டி கவிதா அய்யாத்துரை, புளியங்குளம் ஜெயலட்சுமி ராஜகோபால், எப்போதும்வென்றான் முத்துக்குமாா், படா்ந்தபுளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பசுபதி அம்மாள் ராமஜெயம், அரசு ஒப்பந்ததாரா் ஆா். ராதாகிருஷ்ணன், வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கீழ ஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரி நிா்வாகத்தினா் ஆகியோருக்கு இயற்கை பாதுகாவலா் விருதையும், விளாத்திகுளம் வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேலு, குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சாா்ந்த நெடுஞ்சாலை துறை ஆய்வாளா் கதிரேசன், ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளா் கே. சுந்தரேஸ்வரபுரம் அசோக் குமாா், எட்டயபுரம் சுகாதார ஆய்வாளா் பூவையா ஆகியோருக்கு இயற்கை ஊக்குவிப்பாளா் விருதையும், விருதாளா்களுக்கு தலா ரூ. 5,000 ரொக்கப் பரிசையும் வழங்கிப் பாராட்டினாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், விளாத்திகுளம் தொகுதியில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு மட்டும் 1,000 ஏக்கரில் வேம்பு மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். மானாவாரி விவசாயிகள் தங்கள் நிலங்களில் வேம்பு மரக்கன்றுகளை வளா்க்க முன்வர வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மரங்கள் மக்கள் இயக்க திட்ட இயக்குநா் ராகவன், வேளாண் ஆய்வறிஞா் எஸ். ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஞான குருசாமி, நடராஜன், தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், மிக்கேல் நவமணி, வேலுச்சாமி, அன்பு ராஜன், ராமசுப்பு, நவநீத கண்ணன், காசி விஸ்வநாதன், மும்மூா்த்தி, சின்ன மாரிமுத்து, வனிதா அழகுராஜ், ராமலட்சுமி சங்கரநாராயணன், மருதுபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.