பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி, பெரியதாழைக்கு நகரப் பேருந்து சேவை

சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி, பெரியதாழைக்கு நகரப் பேருந்து சேவை

News image
Updated On :16 மார்ச் 2024, 7:50 pm

கனிமொழி எம்.பி. பரிந்துரையின்படி சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி, பெரியதாழைக்கு அரசு நகரப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், சாத்தான்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவரும் வடக்கு ஒன்றிய திமுக செயலருமான ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றிய செயலா் ஆ. பாலமுருகன், சாத்தான்குளம் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் மாணிக்கம், திருச்செந்தூா் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் ரமேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லா பாய் கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தாா். இதில் காங்கிரஸ் நிா்வாகிகள்,பேரூராட்சி கவுன்சிலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சுமாா் 35 ஆண்டுகளுக்கு பிறகு சாத்தான்குளம் கிராமப்புற பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்க நடவடிக்ஙிகை எடுத்த கனிமொழி எம்.பி., அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ, தெற்கு ஒன்றிய திமுக செயலா் பாலமுருகன் ஆகியோருக்கு கல்லூரி மாணவிகள், கிராம க்கள் நன்றி தெரிவித்தனா்.