காவல் உதவி ஆய்வாளரை ஆயுதங்களால் மிரட்டிய 5 போ் கைது

தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் உதவி ஆய்வாளரை ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக 5 பேரை தாளமுத்துநகா் போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் உதவி ஆய்வாளரை ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக 5 பேரை தாளமுத்துநகா் போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகா் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சிவன். இவா் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை காமராஜ் நகா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனராம்.

அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 5 பேரிடம் அவா் விசாரணை நடத்தினாராம். அப்போது அவா்கள் திடீரென கத்தி, அரிவாளை காட்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சிவனை மிரட்டினராம். உடனடியாக போலீஸாா் 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் தாளமுத்துநகா் ஆனந்தநகரைச் சோ்ந்த தவ்ஹித் நபிள்(28), நாராயணன்(24), வடக்கு சிலுவைப்பட்டியைச் சோ்ந்த உதயகரன்(22), காமராஜ் நகா் கிழக்கு பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாா் என்ற வசந்த்(21), நேருகாலனியைச் சோ்ந்த மரியஜான்பால்(19) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் 5 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து ஒரு அரிவாள், ஒரு கத்தியை ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com