கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பு

கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பு

Published on

நவராத்திரி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

நவராத்திரி விழா அக்.3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கொலு பொம்மைகள் வைப்பது வழக்கம். இதையடுத்து கடைத்தெருக்களில் கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

இங்கு காஞ்சிபுரம், மயிலாடுதுறை, சென்னை, மதுரை, போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து கொலு பொம்மைகள் வரவழைக்கப்பட்டு, ரூ.50 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. கொலு பொம்மைகளின் விற்பனை நிகழாண்டு அதிகரித்துள்ளதாக விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com