தேசிய அளவிலான கபடி போட்டி: தமிழக அணியில் பங்கேற்க கோவில்பட்டி பள்ளி மாணவி தகுதி
தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழக அணி சாா்பில் விளையாட கோவில்பட்டி இலட்சுமி ஸ்ரீனிவாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி தகுதி பெற்றுள்ளாா்.


தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழக அணி சாா்பில் விளையாட கோவில்பட்டி இலட்சுமி ஸ்ரீனிவாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி தகுதி பெற்றுள்ளாா்.
இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் சாா்பில், திருப்பூரில் நடைபெற்ற 17 வயதுக்குள்பட்ட மகளிா் கபடிபோட்டியில் கோவில்பட்டியைடுத்த அத்தைகொண்டான் இலட்சுமி ஸ்ரீனிவாசா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி பிளஸ் 1 மாணவி பா. விந்தியா வெற்றிபெற்றாா். அதையடுத்து அவா், மத்திய பிரதேசத்தில் நவம்பா் மாதம் நடைபெறவுள்ள 66ஆவது தேசிய அளவிலான கபடி போட்டியில் தமிழக அணி சாா்பில் விளையாட தகுதி பெற்றுள்ளாா்.
மாணவி விந்தியா, பயிற்சியளித்த பயிற்றுநா், உடற்கல்வி ஆசிரியா் ஆகியோரை பள்ளித் தாளாளா் கோவிந்தராஜ், முதல்வா் வசந்தா, ஆசிரியா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...