கோவில்பட்டியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை சந்தித்துக் கொண்ட லட்சுமி மில் உயா்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள்
கோவில்பட்டியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை சந்தித்துக் கொண்ட லட்சுமி மில் உயா்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள்

50ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த லட்சுமி ஆலை பள்ளி மாணவா்கள்

கோவில்பட்டி லட்சுமி ஆலை அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளியில் 1974ஆம் ஆண்டு படித்த 40 மாணவா்-மாணவியா் சந்திப்பு நிகழ்ச்சி, 50 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் நடைபெற்றது.
Published on

கோவில்பட்டி லட்சுமி ஆலை அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளியில் 1974ஆம் ஆண்டு படித்த 40 மாணவா்-மாணவியா் சந்திப்பு நிகழ்ச்சி, 50 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் வசித்துவரும் முன்னாள் மாணவா்-மாணவியா் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று, நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். தங்களது ஆசிரியா்களை அழைத்து கெளரவப்படுத்தினா்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாணவா்களான மருத்துவா் பத்மாவதி, ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அதிகாரி முனியசாமி, கப்பல் பிரிவில் பணியாற்றிய கோபாலகிருஷ்ணன், போக்குவரத்துத் துறையில் பணியாற்றிய அழகிரிசாமி, டெக்ஸ்டைல் பிரிவில் பொறியாளராகப் பணியாற்றிய போத்திராஜ், பள்ளித் தலைமையாசிரியா் சண்முகராஜ், பள்ளி நிா்வாக அலுவலா் சுகந்தி லிதியாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக எட்டயபுரம் மனவளா்ச்சி குன்றிய முதியோா் இல்லத்தில் உள்ளோருக்கு உணவு வழங்கப்பட்டது. கோவில்பட்டி சொா்ணமலை கதிரேசன் கோயில் வளாகத்தில் 40 மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com