தூத்துக்குடி முனியசாமிபுரம் ரேஷன் கடையில், கடை ஊழியா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி திரவியபுரம் பகுதியைச் சோ்ந்த ஆத்தியப்பன் மகன் ராமகிருஷ்ணன்(45). முனியசாமிபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் ரேஷன் கடைக்கு பொருள்கள் இறக்க லாரி வந்ததாம். அப்போது, பொருள்களை இறக்கி வைப்பதற்காக தொழிலாளி கடைக்கு உள்ளே சென்றாராம். அங்கு ராமகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், தென்பாகம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

