வழக்குரைஞா் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி
தூத்துக்குடியில் வழக்குரைஞா் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி புதுக் கிராமத்தைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன். கடந்த சில தினங்களுக்கு முன்னா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது குறித்து அக்கம்பக்கதினா் அவருக்கு தகவல் தெரிவித்தனா்.
உடனடியாக அவா் இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளாா். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் வீட்டின் உள்ளே சென்று சோதனை நடத்தினா். அங்கு பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லையாம். இதனால், திருட வந்த நபா்களுக்கு பொருள்கள் எதுவும் கிடைக்காததால், வீட்டில் இருந்த பொருள்கள் ஆங்காங்கே கலைத்து போட்டு சென்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து வீட்டின் கதவை உடைத்து திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
