கோவில்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
கோவில்பட்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

கோவில்பட்டி, கயத்தாறில் ஆா்ப்பாட்டம்

Published on

கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சோமதாஸின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், மதுரை மாவட்டம் செல்லம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் கீதாவின் பணியிட மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க வட்டார தலைவா் அருணா தலைமை வகித்தாா். சங்க உறுப்பினா்களான தேன்மொழி ஜெயந்தி, அனந்த லட்சுமி, முத்துலட்சுமி, போஸ் ராஜ்குமாா் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதுபோல, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவா் வெங்கடாசலபதி தலைமை வகித்தாா். முன்னாள் வட்டார தலைவா் சிங்கராஜ் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

X
Dinamani
www.dinamani.com