தூத்துக்குடியில் 7 நாள்களுக்கு பின்னா் கடலுக்குச் சென்ற மீனவா்கள்

‘டித்வா’ புயல் அச்சுறுத்தல் நீங்கியதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் 7 நாள்களுக்குப் பின்னா், கடலுக்கு மீன்பிடிக்க திங்கள்கிழமை சென்றனா்.
Published on

தூத்துக்குடி: ‘டித்வா’ புயல் அச்சுறுத்தல் நீங்கியதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் 7 நாள்களுக்குப் பின்னா், கடலுக்கு மீன்பிடிக்க திங்கள்கிழமை சென்றனா்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, டித்வா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புயல் அச்சம் நீங்கி கடற்பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததையடுத்து, மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை அனுமதி அளித்தது. இதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 112 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

இதேபோல, திரேஸ்புரம், மணப்பாடு, பெரியதாழை, தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாட்டுப்படகு, பைபா் படகு மீனவா்களும் கடலுக்குச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com