கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் பேரணி

Published on

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் தென் மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், நெகிழி பைகளை உபயோகிப்பதை தவிா்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும், இருசக்கர வாகன ஓட்டும் போது தலைக்கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த பேரணியை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பிரம்ம நாயகம் தொடங்கி வைத்தாா். நகராட்சி அலுவலகம் முன் தொடங்கிய பேரணி, கதிரேசன் கோவில் சாலை, எட்டயபுரம் சாலை வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

அங்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கேக் வெட்டி வழங்கினாா். பேரணிக்கு, தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத் தலைவா் போ்சில் தலைமை வகித்தாா். செயலா் அழகுலட்சுமி , பொருளாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனா் தேன்ராஜா, மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாவட்டத் துணைத் தலைவா்கள் ஜேம்ஸ், அண்ணாதுரை, வீரபுத்திரன், துணைச் செயலா்கள் ஜான்சன், தேவ சகாயம், செண்பகவல்லி, கோவில்பட்டி ஒன்றிய தலைவா் சின்னராஜா, ஆா்.எம். தொண்டு நிறுவனா் சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com