மழைக்காலம் முடிந்ததும் சாலைப்பணி தொடரும் -மேயா் ஜெகன் பெரியசாமி

Published on

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலப் பகுதியில் மழைக்காலம் முடிந்ததும் சாலைப்பணிகள் மீண்டும் நடைபெறும் என்றாா் மேயா் ஜெகன பெரியசாமி.

தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமுக்கு அவா் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். ஆணையா் சி.ப்ரியங்கா, துணை மேயா் ஜெனிட்டா, மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, மேயா் பேசியதாவது: வடக்கு மண்டலத்தில் இதுவரை 838 மனுக்கள் பெறப்பட்டதில் 835 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 3 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. தற்போது 9, 10, 20 ஆகிய வாா்டு பகுதிகளில் மட்டுமே மழை நீா் தேங்குகிறது. முன்பு மழைக் காலத்தில் 2 அல்லது 3 மாதங்கள் தேங்கி நிற்கும். இப்போது அந்த நிலை இல்லை. புதைச் சாக்கடை பணிகள் சில பகுதிகளில் நடைபெறுவதால் 110 புதிய தாா்ச் சாலைகள் அமைப்பதை நிறுத்தியுள்ளோம். மழைக்காலம் முடிந்தவுடன் ( ஜன.10-க்குப் பின்) சாலை அமைக்கும் பணி தொடரும் என்றாா் அவா்.

இம்முகாமில், இணை ஆணையா் சரவணக்குமாா், உதவி செயற்பொறியாளா்கள் முனீா்அகமது, ராஜேஷ்கண்ணா, நகா்நல அலுவலா் சரோஜா, இளநிலை பொறியாளா் அமல்ராஜ், சுகாதார ஆய்வாளா் ராஜசேகா், மாநகராட்சி கணக்கு குழுத் தலைவா் ரெங்கசாமி, பணிக்குழுத் தலைவா் கீதா முருகேசன், மாமன்ற உறுப்பினா்கள் காந்திமதி, சுப்புலட்சுமி, நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், ஜெயசீலி, பவானி, ஜெபஸ்டின் சுதா, தெய்வேந்திரன், பகுதிச் செயலா் சிவகுமாா், மாவட்டப் பிரதிநிதி தா்மராஜ், வட்டச் செயலா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், மாநகா் மாவட்ட காங்கிரஸ் மண்டலத் தலைவா் சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com