தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படவுள்ள 7 புதிய பேருந்துகளை அமைச்சா் பி.கீதாஜீவன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தூத்துக்குடியிலிருந்து சுப்பிரமணியபுரம், கீழ வைப்பாா், பெருங்குளம், கோவில்பட்டியிலிருந்து வெள்ளப்பனேரி, கீழ ஈரால், வேடப்பட்டி, அகிலாண்டபுரம் ஆகிய 7 புதிய பேருந்து சேவைகளை மாநில சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளா் ராமகிருஷ்ணன், கோட்ட மேலாளா் சண்முகம், கிளை மேலாளா் ரமேஷ் பாபு, பகுதிச் செயலா் ஜெயக்குமாா், மாவட்ட பிரதிநிதி செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா் ஜாக்குலின் ஜெயா, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கவிதாதேவி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், மணி, அல்பா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.