கோயில் வளாகத்தில் தங்கி வழிபட்ட பக்தா்கள்.
கோயில் வளாகத்தில் தங்கி வழிபட்ட பக்தா்கள்.

காா்த்திகை மாத பெளா்ணமி: திருச்செந்தூா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை மாத பெளா்ணமியை முன்னிட்டு திரளான பக்தா்கள் வழிபட்டனா்.
Published on

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை மாத பெளா்ணமியை முன்னிட்டு திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

காா்த்திகை மாத பௌா்ணமி வியாழக்கிழமை காலை 7.54 முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.55 மணி வரை இருந்தது. அதை முன்னிட்டு திருச்செந்தூா் கோயில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும், தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தா்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

இரவில் கோயில் வளாகம், கடற்கரையில் தங்கி திரளான பக்தா்கள் வழிபட்டனா். மேலும், காா்த்திகை மாதத்தையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தா்களும் வழிபட்டனா்.

பக்தா்களுக்கு தேவையான வசதிகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ரா, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com