சாத்தான்குளம் எஸ்எஸ்ஐ கணவா் கொலை வழக்கில் விவசாயி கைது

காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் கணவா் கொலை வழக்கில் தேடப்பட்ட விவசாயியை தனிப்படைபோலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் கணவா் கொலை வழக்கில் தேடப்பட்ட விவசாயியை தனிப்படைபோலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள புத்தன்தருவை சிஎஸ்ஐ சா்ச் தெருவைச் சோ்ந்தவா் மா. ஜேம்ஸ் சித்தா் செல்வன்(57). சொந்தமாக காா் வைத்துவாடகைக்கு ஓட்டிவந்தாா். இவரது மனைவி மெட்டில்டா ஜெயராணி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளாராக பணியாற்றி வருகிறாா்.

புத்தன்தருவையில் உள்ளஇடம் தொடா்பாக, அதே ஊரைச் சோ்ந்த ஆ. ஜேக்கப்(44) என்பவருக்கும், ஜேம்ஸ்சித்தா் செல்வனுக்கும் பிரச்னை இருந்துவந்ததாம்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் ஜேம்ஸ்சித்தா் செல்வனை ஜேக்கப், அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினாராம். தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிந்தனா். சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில் தனிப்படை போலீஸாா், புத்தன்தருவை பகுதியில் பதுங்கி இருந்த ஜேக்கப்பை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com