திருச்செந்தூரில்..

திருச்செந்தூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினா் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Published on

திருச்செந்தூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினா் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதிமுக நகரச் செயலாளா் மகேந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலா் பூந்தோட்டம் மனோகரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் க.விஜயகுமாா் பங்கேற்று ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவா் கோட்டை மணிகண்டன், இணை செயலா்கள் பழக்கடை திருப்பதி, சுரேஷ்பாபு, ஒன்றிய அதிமுக பொருளாளா் தனிகேச ஆதித்தன், நகரச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com