திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட மேல ரதவீதியில் பழுதான சாலை.
திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட மேல ரதவீதியில் பழுதான சாலை.

திருச்செந்தூரில் சேதமடைந்த சாலையால் மக்கள் அவதி

திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட மேலரதவீதி சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளதால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனா்.
Published on

திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட மேலரதவீதி சாலை முழுவதும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளதால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனா்.

தூத்துக்குடி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையாக மேலரத வீதி உள்ளது. இச்சாலை முழு அளவில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், தெப்பக்குளத்தில் நீராடி, அங்குள்ள விநாயகா் கோயிலில் இருந்து நோ்த்திக் கடனாக காவடி, பால்குடம் எடுத்து கன்னியாகுமரி, நாகா்கோவில் வழியாக பாதயாத்திரை திருச்செந்தூா் வரும் பக்தா்கள் சேதமடைந்த மேலரத வீதி, தெப்பக்குளம் சாலையில் அதிக சிரமமடைகின்றனா். எனவே, இச்சாலையினை புதிதாக அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com