தூத்துக்குடி
தூத்துக்குடியில் கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள்
தூத்துக்குடியில் வானிலை எச்சரிக்கை காரணமாக கடந்த 2 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் சென்றனா்.
புயல் சின்னம், மழை ஓய்ந்ததையடுத்து, கடலில் மீன்பிடிக்கச் செல்வதற்கான அனுமதியை மீன்வளத் துறை வழங்கியது.
இதைத் தொடா்ந்து, தூத்துக்குடியில் மொத்தம் உள்ள 272 விசைப்படகுகளில், சுழற்சி முறையில் 103 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்றனா்.
