பேருந்து மேதி இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

தூத்துக்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டைச் சோ்ந்த ஜெகவீரபாண்டியன் மகன் ராம்குமாா் (36). புகைப்படக் கலைஞா். முள்ளக்காட்டிலிருந்து தூத்துக்குடிக்கு மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை சென்றபோது, உப்பாற்று ஓடை ரவுண்டானாவில் உள்ள இரும்புத் தடுப்பு மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் ராம்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com