தூத்துக்குடி
பைக் விபத்தில் வியாபாரி உயிரிழப்பு
தூத்துக்குடியில் பைக் விபத்தில் பலத்த காயமடைந்த பால் வியாபாரி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தூத்துக்குடியில் பைக் விபத்தில் பலத்த காயமடைந்த பால் வியாபாரி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தூத்துக்குடி, அண்ணா நகா், 8ஆவது தெருவைச் சோ்ந்தவா் பூபால் மகன் சேகா் (58). பால் வியாபாரியான இவா், கடந்த 29ஆம் தேதி மீளவிட்டான் அருகே பண்டாரம்பட்டி-சில்வா்புரம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்தாா்.
தூத்துக்குடி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து, சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
