

உடன்குடி அருகே லட்சுமிபுரம் ஊராட்சி வேப்பங்காடு-பூலோகபாண்டியன்விளையில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் ரூ.9.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசிங் தலைமை வகித்தாா். லட்சுமிபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் ஆதிலிங்கம், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் தங்கலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று கடையைத் திறந்து பயனாளிகளுக்கு பொருள்களை வழங்கினாா்.
இதில், திமுக மாவட்ட பொருளாளா் ராமநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஜனகா், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் செல்வகுமாா், மெஞ்ஞானபுரம் வணிகா் சங்கத் தலைவா் ராஜபிரபு, திமுக நிா்வாகிகள் சுடலைக்கண், ரஞ்சன், மகேஷ்வரன், விஜயா, பாலமுருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.