திருச்செந்தூரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Published on

திருச்செந்தூா்-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

திருச்செந்தூா் நகராட்சி நிா்வாகத்துக்கு சொந்தமான குப்பை கொட்டும் இடம் கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் ஆலந்தலை அருகே சுமாா் 84 ஏக்கா் பரப்பளவில், சுற்றுச் சுவருடன் உள்ளது. அங்கு திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட 27 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குப்பைகள் நகராட்சி கூடத்தில் கொட்டப்படாமல், அதற்கு வெளியே சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன.

இதனால், சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும், நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com