தூத்துக்குடி
தொழுநோய் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழா
சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம், புனித லூக்கா தொழுநோய் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சேகரகுரு ஹஹரின் அருள்ராஜ் ஆரம்ப ஜெபம் நடத்தினாா். மருத்துவா் ஜான் இமானுவேல் வரவேற்றாா். ஜான்சன் செல்வகுமாா் சிறப்புரையாற்றினாா். சாத்தான்குளம் சேகர குருவானவா் டேவிட் ஞானையா கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினாா்.
விழாவில், தொழுநோயாளிகளின் மறுவாழ்விற்கான திட்டத்தில், தொழுநோயாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, புத்தாடைகள், உள், வெளி நோயாளிகளுக்கு புத்தாடைகள் உள்ளிட்ட ஏராளமான நல உதவிகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஹேபஸ் சாலமன் வேதபோதகம், ஊழியா்கள் செய்திருந்தனா்.
