தூத்துக்குடி
ஊா்க்காவல் படைக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊா்க்காவல் படை வீரா்களாகத் தோ்வான 13 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊா்க்காவல் படை வீரா்களாகத் தோ்வான 13 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊா்க்காவல் படையில் காலியாகவுள்ள 13 இடங்களுக்கு மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் தோ்வு நடைபெற்றது. இதில் 9 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 13 போ் ஊா்க்காவல் படை வீரா்களாகத் தோ்வு செய்யப்பட்டனா்.
தோ்வான 13 பேருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பணி நியமன ஆணையை வழங்கினாா். 13 ஊா்க்காவல் படை வீரா்களுக்கும் செவ்வாய்க்கிழமை (டிச.9) முதல் 45 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
நிகழ்வின்போது, தூத்துக்குடி தலைமையிடத்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் ஆறுமுகம் உடனிருந்தாா்.
