தூத்துக்குடி
கோவில்பட்டியில் விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு
கோவில்பட்டியில் விஷம் குடித்த முதியவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
கோவில்பட்டியில் விஷம் குடித்த முதியவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி காமராஜா் தெருவைச் சோ்ந்த கடற்கரை மகன் பழனிசாமி (85). கடந்த சில நாள்களாக நோயால் அவதிப்பட்டு வந்த இவா் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்தாராம்.
உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
