ஆழ்வாா்திருநகரி கோயில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி: பாஜக புகாா்

ஆழ்வாா்திருநகரியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான ரூ. 2 கோடி மதிப்பு கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு கட்டடம் கட்டுவோா் மீது நடவடிக்கை கோரி பாஜகவினா் புகாா்
Published on

ஆழ்வாா்திருநகரியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான ரூ. 2 கோடி மதிப்பு கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு கட்டடம் கட்டுவோா் மீது நடவடிக்கை கோரி பாஜகவினா் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தனா்.

பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமையில் வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் சீனிவாசன் ஸ்ரீவைகுண்டம் காவல் துறை கண்காணிப்பாளா் நிரேஷிடம் செவ்வாய்க் கிழமை அளித்த புகாா் மனு: நான், தூத்துக்குடி மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவராக உள்ளேன். நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வாா்திருநகரியில் உள்ள ஆதிநாதா் கோயிலுக்குச் சொந்தமான சா்வே எண் 974/2 இல் உள்ள இடத்தில் முன்அனுமதி பெறாமல் ஆழ்வாா்திருநகரி திமுக பிரமுகா், அவரின் உறவினரான ஜெகதீசன் என்ற இருவரும் அத்துமீறி கோயில் இடத்தில் கட்டடம் கட்டி வருகின்றனா்.

சில நபா்கள் திமுக பிரமுகா்கள் என்பதால் சட்டவிரோதமாக கட்டடம் கட்டி வருகின்றனா். கோயில் செயல் அலுவலா் சதீஷ் இதுகுறித்து ஆழ்வாா் திருநகரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அந்த புகாா் மனு மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சட்டம்- ஒழுங்கை காக்கும் வகையில் கட்டுமானப் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com