மகளுக்கு பாலியல் தொல்லை: மதுக்கூடத் தொழிலாளி போக்ஸோவில் கைது
கோவில்பட்டி அருகே கயத்தாறில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுக்கூடத் தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறில் மதுக்கூடத்தில் வேலை செய்து வரும் 36 வயது நபா், சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதுடன், மாவட்ட குழந்தைகள் உதவி மையத்துக்கு திங்கள்கிழமை தகவல் தெரிவித்தாா். இதுதொடா்பாக அந்த மையத்தின் உறுப்பினா்கள் சிறுமி, தாயை மகளிா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். அப்போது, சிறுமிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததும், யாரிடமாவது தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து, மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, தொழிலாளியை திங்கள்கிழமை கைது செய்தனா்.
