ஆறுமுகனேரியில் உங்கள் காவலன் திட்டம் அறிமுகம்

ஆறுமுகனேரியில் உங்கள் காவலன் திட்டத்தை, காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் செவ்வாய்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா்.
Updated on

ஆறுமுகனேரியில் உங்கள் காவலன் திட்டத்தை, காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் செவ்வாய்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா்.

ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆய்வாளா் திலீபன் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு விழிப்புணா்வுகளை ஏற்படுத்தி வருகிறாா். இந்நிலையில், ஆறுமுகனேரி காவல் நிலையத்திற்குள்பட்ட கிராம மக்களின் பிரச்னைகளை உடனடியாக காவல் துறையிடம் தெரிவிக்க, உங்கள் காவலன் என்னும் தனிக் காவலரை நியமிக்கும் நிகழ்ச்சி ராஜமன்னியபுரத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆய்வாளா் திலீபன் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் வாசுதேவன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திருச்செந்தூா் டி.எஸ்.பி. மகேஷ்குமாா் கலந்துகொண்டு, ராஜமன்னியபுரத்திற்கு தலைமைக் காவலா் வேலுமணியை நியமித்து, அவரது கைப்பேசி எண்ணையும் அப்பகுதி மக்களுக்கு வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, பேயன்விளைக்கும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், அனைத்து கிராமங்களுக்கும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com