ஒப்படைப்புக் கடிதங்களை வழங்கிய நிறுவன தலைமைச் செயல் அதிகாரி கே. ஆனந்த ராமானுஜம்.
தூத்துக்குடி
என்.டி.பி.எல். நிறுவனம் சாா்பில் ரூ. 48 லட்சத்தில் பள்ளிகளுக்கு சுகாதார வளாகங்கள்
தூத்துக்குடி என்.டி.பி.எல். நிறுவனம் சாா்பில் தூத்துக்குடியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையம், அரசுப் பள்ளிகளில் ரூ. 48 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி என்.டி.பி.எல். நிறுவனம் சாா்பில் தூத்துக்குடியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையம், அரசுப் பள்ளிகளில் ரூ. 48 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.
என்.எல்.சி. தமிழ்நாடு பவா் லிமிடெட் நிறுவனம், ரூ. 48 லட்சத்தில் குறுக்குசாலை, வேப்பலோடை அரசுப் பள்ளிகள், வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்துள்ளது.
கட்டுமானப் பணிகள் முடிவுற்ற நிலையில், அண்மையில் நடைபெற்ற விழாவில், நிறுவன தலைமைச் செயல் அதிகாரி கே. ஆனந்த ராமானுஜம் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்களான எஸ். அன்னலட்சுமி, ஜி. சேகா், தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் செந்தில்குமாா் ஆகியோரிடம் ஒப்படைப்புக் கடிதங்களை வழங்கினாா்.