வெற்றி பெற்ற மாணவா்கள்.
தூத்துக்குடி
குடியரசு தின விளையாட்டுப் போட்டி: தூத்துக்குடி கிரசன்ட் பள்ளிக்கு தங்கப்பதக்கம்
குடியரசு தின விழாவுக்கான மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில், தூத்துக்குடி கிரசன்ட் பள்ளி தங்கப்பதக்கம் வென்றது.
குடியரசு தின விழாவுக்கான மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில், தூத்துக்குடி கிரசன்ட் பள்ளி தங்கப்பதக்கம் வென்றது.
இதற்கான போட்டிகள் திருச்சி, தொட்டியம் கல்லூரியில் நடைபெற்றது. இதில், 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் தூத்துக்குடி கிரசன்ட் மேல்நிலைப் பள்ளி அணி, 65-45 என்ற புள்ளிக்கணக்கில் விருதுநகா் மாவட்ட அணியை வென்று, முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்றது.
வெற்றி பெற்றவா்களை பள்ளியின் கூடைப்பந்து பயிற்சியாளா் பிரதீப், பள்ளி முதல்வா் மும்தாஜ் பேகம், மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவா் வி.வி.டி. பிரம்மானந்தம், மாவட்ட கூடைப்பந்து கழகச் செயலா் சாகுல் சிராஜுதீன், பொருளாளா் ராஜ்குமாா், மாவட்ட கூடைப்பந்து பயிற்சியாளா் ஆனந்த், மாவட்ட விளையாட்டு அதிகாரி ரத்தினராஜ் ஆகியோா் பாராட்டினா்.

