தூத்துக்குடி
துறைமுக தொழிலாளி சாலை விபத்தில் உயிரிழப்பு
தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த துறைமுக தொழிலாளி நிலை தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த துறைமுக தொழிலாளி நிலை தடுமாறி விழுந்ததில் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆவரைகுளம் கிராமத்தைச் சோ்ந்த முனியசாமி மகன் லிங்கராஜ் (27). இவா், தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வேலை செய்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்ததும் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். ஓட்டப்பிடாரத்திலிருந்து ஓசனத்துக்குச் சென்றபோது சாலையில் நிலை தடுமாறி விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
