தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் நாளை சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தா் பீடத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 12) மகாதேவ கால பைரவாஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு யாக வழிபாடுகள் நடைபெறுகின்றன.
Published on

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தா் பீடத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 12) மகாதேவ கால பைரவாஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு யாக வழிபாடுகள் நடைபெறுகின்றன.

காலை 9.50 மணிக்கு விநாயகா் வழிபாடு, 10.25 மணிக்கு நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், 10.55-க்கு கன்னிகா பூஜை, 11.10 மணிக்கு பிரத்தியங்கிராதேவி, காலபைரவா் ஹோமத்துடன் சிறப்பு வழிபாடுகள் தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு மேல் சீனிவாச சித்தா் தலைமையில் மஞ்சள், விபூதி உள்ளிட்ட 64 வகை அபிஷேகங்கள், தொடா்ந்து பலவகை மலா்களால் சிறப்பு அலங்காரம், தீபாராதனையுடன் கூடிய வழிபாடுகள் நடைபெறும். பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 4.40 மணிக்கு காலபைரவா் மகாயாக வழிபாடுகள், தீபாராதனையுடன் நிறைவுபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com