கோவில்பட்டி பள்ளியில் 506 மாணவிகளுக்கு சைக்கிள்கள்
கோவில்பட்டி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் கலந்துகொண்டு, 506 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி பேசியது:
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு சென்று படிப்பவா்களுக்கும் அரசு பல்வேறு உதவிகளை செய்கிறது.
மாணவிகள் கைப்பேசி, சமூக வலைதளங்களை கவனமாகவும், வரையறையுடனும் பயன்படுத்த வேண்டும். அதிக நேரத்தை கைப்பேசியில் செலவிடாமல், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில் வேல் முருகன், நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, பள்ளியின் தலைமையாசிரியை ஜெயலதா, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் இந்துமதி கௌதமன், செண்பகவல்லி அம்மன் கோவில் அறங்காவலா் குழு உறுப்பினா் சண்முகராஜ், திமுக ஒன்றியச் செயலா் வீ. முருகேசன், நகர (கிழக்கு) பொறுப்பாளா் சுரேஷ், வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலா் ஏஞ்சலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

