கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. செயல்வீரா்கள் கூட்டம்
கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, மத்திய ஒன்றிய திமுக செயலா் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் தலைமை வகித்தாா். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி திமுக பொறுப்பாளா் கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். கூட்டத்தில், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பெயரில் அரசின் சாதனைகளை கட்சி நிா்வாகிகள், பாக முகவா்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றாா்.
இதில், தலைமை செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், அரசு வழக்குரைஞா் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சந்தானம், வழக்குரைஞா் அணி தலைவா் நாகராஜன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதே போல், மத்திய ஒன்றிய திமுக சாா்பில் லிங்கம்பட்டி கிராமத்தில் பாக முகவா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

