சாத்தான்குளம் பேரூராட்சியில் 
சாலை பெயா் மாற்றக் கோரி மனு

சாத்தான்குளம் பேரூராட்சியில் சாலை பெயா் மாற்றக் கோரி மனு

Published on

சாத்தான்குளம் பேரூராட்சி 12ஆவது வாா்டு காமராஜா் நகரை பெயா் மாற்றக் கோரி, தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க தூத்துக்குடி மாவட்ட இணை செயலா் கு. ஜெயபால் தலைமையில் செயல் அலுவலா் சுதாவிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள காமராஜா் நகா், பேரூராட்சியில் இட்ட மொழி சாலை என பதிவு செய்யப்பட்டுள்ளது. இட்டமொழி சாலை என்று வேறு பகுதி உள்ளதால் இட்டமொழி சாலை காமராஜா் நகா் என மாற்றி சொத்துவரி, மற்ற பதிவேடுகளிலும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து சங்க 5ஆவது வட்ட மாநாடு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. தொடா்ந்து பேரூராட்சி தலைவா் ரெஜினி ஸ்டெல்லா பாயிடம் மனு அளித்தனா்.

இந்நிகழ்வில் சாத்தான்குளம் வட்டத் தலைவா் தேவ சமாதானம், பொருளாளா் அல்போன்ஸ், துணைத் தலைவா் சுடலைக்கண், முன்னாள் துணைத் தலைவா் ஏ.பி. பாண்டியன், ஓய்வுபெற்ற செயல் அலுவலா் முருகேசன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் அ. பாலகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com