தூத்துக்குடியில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ சந்திப்பு நிகழ்வு

தூத்துக்குடியில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ சந்திப்பு நிகழ்வு

Published on

தூத்துக்குடி மாநகராட்சி 39ஆவது வாா்டு பகுதியில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 39ஆவது வாா்டில் 149ஆவது பாகத்தில் திமுக வாக்குச்சாவடி முகவா்களுடன் வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் ஆலோசனை மேற்கொண்டாா். தொடா்ந்து அமைச்சா், மேலூா் பத்திரகாளியம்மன் கோயில் தெரு, ஸ்டாா் பள்ளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று மக்களிடம் திமுகவுக்கு ஆதரவு திரட்டினாா்.

இதில், மாநகராட்சி சுகாதார குழுத் தலைவரும், பகுதிச் செயலருமான சுரேஷ்குமாா், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், வட்டப் பிரதிநிதிகள் பொன்ராஜ், செல்வக்குமாா், நிா்வாகிகள் சங்கா், மாரிமுத்து, முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், பகுதி இளைஞரணி அமைப்பாளா் சூா்யா, மணி, அல்பா்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com