தூத்துக்குடி
தூத்துக்குடியில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடியில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூதியா் நல அமைப்பு சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஓய்வூதியா்கள் ஓய்வூதிய பணப் பலன்கள் மற்றும் பிஎஃப் வட்டி பெறுவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும், இவ்விசயத்தில் தமிழக அரசு தலையிட்டு, நிரந்தர தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓய்வூதியா்கள் மாவட்ட அமைப்புக் குழு மனோகரன் தலைமை வகித்தாா். இதில், சங்க நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
