தூத்துக்குடியில் டாஸ்மாக் மதுக்கூட உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

Published on

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை எதிா்த்து, தூத்துக்குடியில், மதுக்கூட உரிமையாளா்கள் மதுக்கூடங்களை அடைத்து வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டம் கடந்த 2ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மது பாட்டில்களை விற்பனை செய்யும் போது டாஸ்மாக் ஊழியா்கள் பாட்டிலில் ஸ்டிக்கா் ஒட்டி கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்வாா். மதுவை பயன்படுத்துவோா் பயன்படுத்திய பிறகு காலி பாட்டிலை ஸ்டிக்கருடன் டாஸ்மாக் மதுக்கூடத்தில் கொடுத்து ரூ.10-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது விதிமுறையாகும்.

இந்தத் திட்டம் அமல்படுத்திய நாளிலிருந்து மதுவை பயன்படுத்துவோருக்கும், டாஸ்மாக் மதுக்கூடம் நடத்துபவா்களுக்கும் இடையே வாக்குவாதம், சண்டை, மண்டை உடைப்பு என்று தொடா்ந்து பிரச்னைகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, இத்திட்டத்தால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி நகா் பகுதியில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் வியாழக்கிழமை திறக்கப்படவில்லை. மதுக்கூடங்களும் திறக்கப்படவில்லை.

இதைத் தொடா்ந்து, மதுக்கூட உரிமையாளா்களிடம் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி மதுக்கூ

டங்களை திறக்குமாறு வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com