தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீா் முகாம்

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீா் முகாம்

Published on

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் சி. ப்ரியங்கா முன்னிலை வகித்தாா். முகாமில், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு, மேயா் பேசியது:

மேற்கு மண்டலத்தில் இதுவரை 938 மனுக்கள் பெறப்பட்டு, 930 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 16, 17, 18 ஆகிய வாா்டுகளில் புதைச் சாக்கடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைக் காலத்தில் வேலை நடைபெறவில்லை. பக்கிள் ஓடை விரிவாக்கம் செய்யப்பட்டு மழைநீா் தடையின்றி சென்ால், மாநகரப் பகுதிகளில் பாதிப்பு இல்லை. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பக்கிள் ஓடை கூடுதலாக 7 கி.மீ. தூரத்துக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com