நாசரேத்தில் வேதாகம ஞாயிறு நிகழ்ச்சி

நாசரேத்தில் வேதாகம ஞாயிறு நிகழ்ச்சி

Published on

நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் வேதாகம ஞாயிறு நிகழ்ச்சி நடைபெற்றது.

பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து, ஜெபித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். ஸ்தாபனங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து, வேதத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறியவா்களுக்கும், வேதாகம தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

உதவி குரு தனசேகா் ராஜா, சேகர செயலா் ராஜசிங் சாலமோன் , பொருளாளா் லேவி அசோக் சுந்தர்ராஜ், சபை ஊழியா்கள் ஜெபராஜ், ஜெசு, திருமண்டல பெருமன்ற உறுப்பினா்கள், சேகர கமிட்டியினா், திருச்சபை மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com