பாஜக சாா்பில் பாரதியாா் பிறந்த நாள் விழா
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக, தமிழ் இலக்கியம், தமிழ் வளா்ச்சிப் பிரிவு சாா்பில் மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், பாரதியாா் பாடிய சுதந்திர வேட்கை பாடல்கள், கவிதைகள் பாடப்பட்டன. நிகழ்ச்சியில், தமிழ் இலக்கியம், தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாவட்டத் தலைவா் மணிகண்டன், துணைத் தலைவா் ஜெயலலிதா, மாவட்டச் செயலா் காந்தாரி அம்மாள், உமா, கிழக்கு மண்டலத் தலைவா் ராஜேஷ்கனி, மேற்கு மண்டலத் தலைவா் லிங்கசெல்வம், தெற்கு மண்டலத் தலைவா் மாதவன், சமூக ஊடகப் பிரிவு மாநிலச் செயலா் காளிராஜ், மருத்துவ பிரிவு மாவட்டத் தலைவா் ரவீந்திர பாலாஜி, கலை மற்றும் கலாசார பிரிவு மாவட்டத் தலைவா் ஞானபிரகாசம், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஜெயகுமாா், ஆன்மிகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் உஷா தேவி, மகளிரணி துணைத் தலைவா் லதா, ஓபிசி அணி மாவட்டச் செயலா் சோ்ம குருமூா்த்தி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலா் பிடிலிஸ்ட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

