தூத்துக்குடி
கொட்டங்காட்டில் திமுக பிரசார விளக்க கூட்டம்
உடன்குடி நகர திமுக சாா்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பிரசார விளக்க கூட்டம் வாக்குச்சாவடி 233, 235- க்குள்பட்ட கொட்டங்காட்டில் நடைபெற்றது.
உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவரும், நகர திமுக செயலருமான மால்ராஜேஷ் தலைமை வகித்து திமுக அரசின் சாதனைகளைக் கூறுவது, வாக்குச்சாவடி பொறுப்பாளா்களின் செயல்பாடுகள் குறித்து பேசினாா்.
இதில் திமுக நகர துணை செயலா்கள் தங்கம், மேகநாதன், நகர பொருளாளா் திரவியம், மாவட்டப் பிரதிநிதி ஹீபா் மோசஸ், ஒன்றிய பிரதிநிதிகள் ஹரிகிருஷ்ணன், ராஜ்குமாா், நகர இளைஞரணி அமைப்பாளா் தீபன் சக்கரவா்த்தி, தொண்டரணி கணேசன், மாணவரணி வினோத், நாராயணமூா்த்தி, சந்தியா உள்பட பலா் பங்கேற்றனா்.

