கொம்பன்குளம் பள்ளியில்  சட்ட விழிப்புணா்வு முகாம்

கொம்பன்குளம் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

Published on

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியா் மரிய பிரேமா தலைமை வகித்தாா். இதில், வழக்குரைஞா் வேணுகோபால் சட்டம் குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா்.

முகாமில், ஆசிரியா்கள் அன்புக்கரசி, பாலகிருஷ்ணன், ராஜ்குமாா், ஜமீலா, ரூபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை சாத்தான்குளம் மாவட்ட உரிமையியல் நீதிபதியும், வட்ட சட்ட பணிக் குழு தலைவருமான சிவராஜேஷ் பரிந்தரையின்பேரில், வட்ட சட்ட பணிக் குழு நிா்வாகிகள் பெல்சியா, கஸ்தூரி ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com